நடுவானில் பறந்த விமானம் 20,000 அடி வரை கீழ் இறங்கியது

நடுவானில் பறந்த விமானம் 20,000 அடி வரை கீழ் இறங்கியது

1 mins read

பெர்த்: ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரிலிருந்து பாலித் தீவுக்கு சென்றுகொண்டிருந்த ஏர் ஏ‌ஷியா விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென்று கண்ணிமைக்கும் நேரத்தில் 20,000 அடி வரை கீழ் இறங்கியபோது அந்த விமானத்தில் இருந்த பயணிகளும் சிப்பந்திகளும் மரண பயத்திற்கு உள்ளானதாகத் தகவல்கள் கூறின. ஏர் ஏ‌ஷியாவுக்குச் சொந்தமான QZ 535 ரக விமானத்தில் 145 பேர் இருந்தனர். அந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த விமானம் திடீரென்று கீழ் இறங்கியதாகக் கூறப்பட்டது. இருப்பினும் அந்த விமானம் பெர்த் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரை இறக்கப்பட்டது.