வெள்ளை இனவாத கூட்டம்: ஃபுளோரிடாவில் அவசர நிலை

வெள்ளை இனவாத கூட்டம்: ஃபுளோரிடாவில் அவசர நிலை

1 mins read

ஃபுளோரிடா: ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தில் வரும் வியாழக்கிழமை நடக்கவிருக்கும் வெள்ளை இனவாதத் தலைவரின் உரைக்கு முன்னதாக சென்ற திங்கட்கிழமை ஃபுளோரிடா ஆளுநர் ரிக் ஸ்காட் மாநிலம் முழுவதும் அவசர நிலையை அறிவித்துள்ளார். தாக்குதல்கள் நிகழக் கூடும் என்பதால் அதற்குத் தயாராகும் விதமாக அந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபுளோரிடா பல்கலைக்கழகமும் ஒட்டுமொத்த சமூகமும் எந்த ஒரு சம்பவத்திற்கும் தயாராக இருக்க வேண்டும் என்பதாலும் அப்படி இருந்தால்தான் அனைவரும் பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதாலும்தான் இந்த அவசர நிலையை அறிவித்திருப்பதாக ஸ்காட் கூறியுள்ளார். சென்ற ஆகஸ்ட் மாதம் வெர்ஜினியாவின் சார்லட்ஸ்வில் நகரில் வெள்ளை இனவாதிகளின் பேரணி பெரும் கலவரத்தில் முடிந்தது.