கியூபாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் மர்ம தாக்குதல்

கியூபாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் மர்ம தாக்குதல்

1 mins read

வா‌ஷிங்டன்: கியூபா தலைநகர் ஹவானாவில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தில் 22 அமெரிக்கர்களை நோய் பாதித்துள்ளது. காது கேளாமை, மயக்கம், நிலையின்றி போவது, கண் பார்வை குன்றுவது, தலைவலி, சிந்தனை குன்றி யிருப்பது போன்ற நோய்களால் அவர்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்த மர்ம தாக்குதலுக்கு கியூபாதான் காரணம் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சாடியுள்ளார். உடனே அனைத்துத் தூதரக அதிகாரி களையும் ஹவானாவைவிட்டு வெளியேறும்படியும் அவர் உத்தர விட்டுள்ளார்.

டிரம்ப்பின் இந்தக் கருத்து அமெரிக்க வெளியுறவு அமைச்சின் நிலைப்பாட்டிற்கு மாறாக உள்ளது. இதுவரை இத்தகைய நிலைக்கு என்ன காரணம் என்றும் யார் காரணம் என்றும் தெரியவில்லை என்று வெளியுறவு அமைச்சு கூறிவருகிறது. கியூபாவுக்கும் அமெரிக்கா வுக்குமிடையிலான போக்குவரத் தையும் பொருளியலையும் கட்டுப் படுத்தும் திட்டத்தை அறிவிக்கப் போவதாக முன்பு கூறியிருந்த டிரம்ப், இதுவரை அதற்கான முயற்சியை எடுக்கவில்லை. இரு நாடுகளுக்குமிடையிலான பனிப் போரை ஒபாமா நிர்வாகம் சரிசெய்தது ஒரு மோசமான திட்டம் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.