சோல்: அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து கொரிய தீபகற்பத்தில் கிழக்கு, மேற்குக் கடலோரப் பகுதிகளில் பெரிய அளவில் கடற்படைப் பயிற்சியைத் தொடங்கி இருக்கும் நிலையில் எந்த நேரத்திலும் அணுவாயுதப் போர் வெடிக்கலாம் என்று வட கொரியா எச்சரிக்கை விடுத் துள்ளது. இலக்கு எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அதைத் தாக்கி அழிக்கும் வகையில் பலதரப்பட்ட அணுவாயுதங்களைத் தமது நாடு கொண்டுள்ளது என்றும் அமெரிக் காவின் மையப்பகுதி முழுவதையும் தங்களால் தாக்க முடியும் என்றும் ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கான வடகொரியத் துணைத் தூதர் கிம் இன் ரையோங் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், "வடகொரியா அணுவாயுதங்களைப் பொறுப்புடன் கையாளும்," என்றும் திரு கிம் குறிப்பிட்டார். "வடகொரியாவுக்கு எதிரான அமெரிக்காவின் ராணுவ நட வடிக்கைகளில் பங்குகொள்ளாத வரை, எந்த நாட்டின் மீதும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவோ அல்லது பயன்படுத்தவிருப்பதாக மிரட்டவோ மாட்டோம்," என்றார் அவர். அமெரிக்க அதிபராக டோனல்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு அந் நாட்டிற்கும் வடகொரியாவிற்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வருகிறது. அதனால் கடந்த சில மாதங்களாக வடகொரியா அவ்வப் போது இப்படி மிரட்டல் விடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது. அமெரிக்கத் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டுமெனில் அணுவாயுதத்தால் அந்நாட்டைத் தாக்கும் வல்லமையைப் பெற்று இருக்க வேண்டியது அவசியம் என்று கிம் ஜோங் உன் தலை மையிலான வடகொரிய அரசாங்கம் திரும்பத் திரும்ப கூறி வருகிறது.

