ஆப்கான் போலிஸ் பயிற்சி நிலையத்தின் மீது தாக்குதல்

ஆப்கான் போலிஸ் பயிற்சி நிலையத்தின் மீது தாக்குதல்

1 mins read

காபூல்: ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள போலிஸ் பயிற்சி நிலையத்தின் மீது தற்கொலைப் படை போராளிகளும் துப்பாக்கிக்காரர்களும் நேற்று தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் கூறினர். முதலில் தற்கொலைப் படையைச் சேர்ந்த போராளி ஒருவன் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை அந்த பயிற்சி நிலையத்தின் சுவரில் மோதி வெடிக்கச் செய்ததாகவும் அதனைத் தொடர்ந்து துப்பாக்கிக்காரர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தத் தொடங்கியதாகவும் உள்துறை அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அத்தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினருக்கும் துப்பாக்கிகள் ஏந்திய போராளிகளுக்கும் இடையே நீண்ட நேரம் கடும் சண்டை நடந்ததாகக் கூறப்பட்டது. அத்தாக்குதலில் உயிரிழப்பு பற்றிய தகவல் எதுவும் வெளிவரவில்லை. ஆப்கானில் தொடர்ந்து நடக்கும் வெடிகுண்டு தாக்குதல், தற்கொலைத் தாக்குதல் போன்ற தாக்குதல்களுக்கு தலிபான் போராளிகளே காரணம் என்று ஆப்கான் அதிகாரிகள் கூறி வரும் வேளையில் நேற்று நடந்த தாக்குதலுக்கும் தலிபான் குழுவே பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.