சர்ச்சைக்கிடமாக பேசிய சமய போதகர் சிலாங்கூரில் போதிக்க தடை

சர்ச்சைக்கிடமாக பேசிய சமய போதகர் சிலாங்கூரில் போதிக்க தடை

1 mins read

கோலாலம்பூர்: இனவாதத்தைத் தூண்டும் விதமாகவும் தவறான நோக்கத்துடனும் அரச நிறுவனத்தைப் பற்றி இழிவாகப் பேசியதற்காக ஸமிஹான் மாட் சின் என்ற சமய போதகர் இனி சிலாங்கூரில் போதிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவை சிலாங்கூர் மாநில சுல்தான் பிறப்பித்துள்ளார். ஒரு பள்ளிவாசலில் நடந்த சமய கூட்டம் ஒன்றில் அந்தப் போதகர் பேசியுள்ளார். தடை உத்தரவை ஏற்றுக்கொள்வதாகவும் அரச குடும்பத்தோடு எந்தவித பிரச்சினையிலும் ஈடுபட நினைக்கவில்லை என்றும் திரு ஸமிஹான் கூறியுள்ளார். சாதாரண குடிமகனாக சுல்தானின் உத்தரவை மதித்து நடந்தாலும் தொடர்ந்து தனது நம்பிக்கை மற்றும் கொள்கைகளைப் பற்றி பேசப்போவதாக அவர் கூறியுள்ளார். பணத்துக்காகவோ பெருமைக்காகவோ தான் அவ்வாறு பேசவில்லை என்றும் திரு ஸமிஹான் தெரிவித்துள்ளார்.