வெல்லிங்டன் நியூசிலாந்தின் மூன்றாவது பெண் பிரதமராக பொறுப்பேற்கவுள்ளார். தொழிற் கட்சியின் ஜசின்டா ஆர்டன், சென்ற மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற அந்நாட்டின் பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை வெற்றி கிடைக்கவில்லை. நியூசிலாந்தின் இரு பெரிய கட்சிகளான தேசிய கட்சி 56 இடங்களிலும் தொழிற் கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றன. இரு கட்சிகளில் எந்தக் கட்சியும் ஆட்சி அமைப்பதற்குப் போதுமான இடங்களைக் கைப்பற்றவில்லை. மூன்றாவது நிலையில் ஒன்பதே இடங்களில் வெற்றி பெற்ற வின்ஸ்டன் பீட்டர்சின் நியூசிலாந்து ஃபர்ஸ்ட் கட்சியே ஆட்சி அமைப்பது யார் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை வைத்திருந்தது. பொருளியலையும் நாணய மதிப்பையும் பெரிதும் பாதிக்காத தேர்தல் முடிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தொழிற் கட்சிக்கு தன் ஆதரவைத் தருவதாகக் கூறிய நியூசிலாந்து ஃபர்ஸ்ட் கட்சி, பிரதமராகும் வாய்ப்பை ஜசின்டாவிடம் வழங்கியது.
நியூசிலாந்தின் புதிய பிரதமராக ஜசின்டா ஆர்டன்
1 mins read

