வாஷிங்டன்: மூவரின் உயிர்களைப் பறித்த அமெரிக்காவின் மேரிலேண்ட் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 37 வயது ஆடவர் ரடீ பிரின்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தச் சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். தனித்தனியே இரண்டு இடங்களில் அவர் அந்தத் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாகவும் அந்த ஒரு நாளில் மட்டுமே அவர் ஆறு முறை சுட்டதாகவும் கூறப்படுகிறது. பிரின்ஸ் பயங்கரமான ஆடவர் என்றும் திட்டமிட்டு துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளதாகவும் வில்மிங்டன் போலிஸ் தலைவர் ராபர்ட் டிரேசி கூறியிருக்கிறார். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு ஏற்படுவது அமெரிக்காவில் சமீப காலங்களில் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு மட்டுமே அமெரிக்காவில் பொதுமக்கள் மீது 286 முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
மேரிலேண்ட் துப்பாக்கிச்சூடு: சந்தேக நபர் கைது
1 mins read

