பிலிப்பீன்ஸ்: ராணுவ ஆட்சி தொடரும்

பிலிப்பீன்ஸ்: ராணுவ ஆட்சி தொடரும்

1 mins read

மணிலா: பிலிப்பீன்ஸின் மிண்டானோ பகுதியில் கடைசிப் பயங்கரவாதியை ஒழிக்கும் வரை ராணுவ ஆட்சி நடப்பில் இருக்கும் என்று அந்நாட்டு அதிபர் டுட்டர்டே நேற்று கூறினார். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மராவி நகரம் முற்றிலும் மீட்கப்பட்டு விட்டதாக இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் அறிவித்தார். மிண்டானோ பகுதியில் கடந்த மே மாதம் 23ஆம் தேதி ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின்னர் அது டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பயங்கரவாத நடவடிக்கைகளை முற்றிலும் ஒழிக்கும் வரை அப்பகுதியில் ராணுவ ஆட்சி நீடிக்கும் என்று அதிபர் டுட்டர்டே கூறியுள்ளார்.