மன்னரின் $123மி. இறுதிச் சடங்கின் ஒத்திகை

மன்னரின் $123மி. இறுதிச் சடங்கின் ஒத்திகை

1 mins read
7a535d98-1d42-4fc0-992c-0e881b287ba9
-

பேங்காக்: 250,000 பேர் கலந்து கொள்ளவிருக்கும் தாய்லாந்தின் மறைந்த மன்னர் பூமிபோல் அதுல்யதேஜின் இறுதிச் சடங்கு அடுத்த வாரம் நடைபெறவிருக்கி றது. அதற்கான ஒத்திகை நேற்று தலைநகர் பேங்காக்கில் நடந்தது. ஓராண்டுகாலம் நடந்து வந்த இறுதிச் சடங்கின் ஏற்பாடுகளில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கட்டட அமைப்புகளும் அடங்கும். ஒத்திகை சுமார் ஐந்து மணி நேரம் நடந்தது. அடுத்த வாரம் தொடங்கவிருக்கும் இறுதிச் சடங்கு ஐந்து நாட்களுக்கு நடை பெறும். கடந்த ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி மறைந்த மன்னரின் நல்லுடல் இம்மாதம் 26ஆம் தேதி தகனம் செய்யப்படும். அரண்மனைக்கு அருகே நடை பெற்ற ஒத்திகையில் ஈடுபட்ட அதிகாரிகள். படம்: ராய்ட்டர்ஸ்