தேர்தல் கருத்துக்கணிப்பு: மாபெரும் வெற்றி

தேர்தல் கருத்துக்கணிப்பு: மாபெரும் வெற்றி

1 mins read
3f83e79c-a1ea-49bb-b11f-e7f2e02dd257
-

தோக்கியோ: கொட்டும் மழை யிலும் நேற்று தொடர்ந்து நடை பெற்ற தேர்தலில் ஜப்பானை ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி பெருவாரியான வாக்கு களைப் பெற்று பெரும்பான்மை வெற்றிபெறும் என தேர்தல் முடிவு தொடர்பான ஊடகங் களின் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. வாக்குச்சாவடிகள் மூடப்பட்ட பிறகு (உள்ளூர் நேரப்படி இரவு 8 மணி) இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.

நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் மொத்தமுள்ள 465 தொகுதிகளில் 253 முதல் 300வரை லிபரல் ஜனநாயகக் கட்சி பெறும் என கணிக்கப் படுகிறது. இந்தக் கட்சி 332 வேட்பாளர்களை தேர்தலில் நிறுத் தியிருந்தது. தனது கூட்டணிக் கட்சியான கொமிடோவுடன் இணைந்து லிபரல் ஜனநாயகக் கட்சி மூன்றில் இரண்டு பங்கு இடங் களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மை பெறும் என்று கூறப்பட்டது. ஜப்பானின் கீழவை, மேலவை ஆகியவற்றில் கிடைக்கும் ஆதர வைக் கொண்டே அரசியலமைப் புச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவரமுடியும். போர் நிறுத் தம் தொடர்பான அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர லிபரல் ஜனநாயகக் கட்சி விருப்பம் கொண்டுள்ளது.

ஜப்பான் பிரதமர் ‌ஷின்சோ அபேயின் ஆளுங்கட்சியும் அதன் கூட்டணிக் கட்சியும் மாபெரும் வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. படம்: ராய்ட்டர்ஸ்