நாடு திரும்பும் ஐஎஸ் ஆதரவாளர்களால் மிரட்டல்

நாடு திரும்பும் ஐஎஸ் ஆதரவாளர்களால் மிரட்டல்

1 mins read

மத்திய கிழக்கில் 2014ல் தலை விரித்தாடிய ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்வதற்காக சுமார் 110 நாடுகளிலிருந்து 40,000 பேருக்கும் அதிகமான வெளி நாட்டினர் அங்கு சென் றனர். அந்த வட்டாரத்தில் ஐஎஸ் அமைப்பை ஒழிக்க அமெரிக்க ஆதரவுடன் கூடிய கூட்டணிப் படைகள் முழுமூச்சாக எடுத்த நடவடிக்கைகள் காரணமாக அந்தப் பயங்கரவாத அமைப்பு ஏறக்குறைய ஒடுங்கிவிட்டது. இந்நிலையில், அந்த அமைப் பில் சேர்வதற்குச் சென்றவர்களில் குறைந்தபட்சம் 5,600 பேர் தங்கள் நாட்டிற்குத் திரும்பி இருக்கிறார்கள். அல்லது வேறு எங்கோ பாதுகாப்பான இடத்திற் குச் சென்று இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

இவர்கள் 33 நாடுகளை சேர்ந்தவர்கள் என்றும் சோவியத் குடியரசு முதல் இந்தோனீசியா, மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள் வரை பலதரப்பட்ட நாடு களும் இவற்றில் அடங்கும் என்றும் ஒரு செய்தி குறிப்பிட்டு உள்ளது. அமெரிக்காவை தள மாகக் கொண்டு செயல்படும் பாதுகாப்புத் துறை அறிவுஜீவி அமைப்பான 'டிஎஸ்சி' என்ற அமைப்பு அந்த செய்தியை வெளி யிட்டு இருக்கிறது. இப்படி நாடு திரும்பியிருக்கும் நபர்களால் பாதுகாப்பு மிரட்டல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் இந்த மிரட்டலைச் சமாளிக்க உலகம் முற்றிலும் உள்ள அரசாங் கங்கள் இனிமேல்தான் உரிய வழிகளைக் காணவேண்டும் என் றும் அந்த அறிக்கை தெரிவித் துள்ளது.