கிம் ஜோங் நாம் வழக்கு: சம்பவ இடத்தைப் பார்வையிட்ட நீதிபதி

கிம் ஜோங் நாம் வழக்கு: சம்பவ இடத்தைப் பார்வையிட்ட நீதிபதி

1 mins read
20374e42-b66e-4123-85c4-30d9cda30ba8
-

செப்பாங்: கோலாலம்பூர் அனைத் துலக விமான நிலையத்தில் கிம் ஜோங் நாம்மை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பெண்களும் பலத்த போலிஸ் பாதுகாப்புடன் சம்பவ இடத்திற்கு நேற்றுக் காலை வந்தனர். இந்தோனீசியரான சித்தி அயிஷா, 25, வியட்நாமியரான டுவான் தி ஹுவாங், 28, இருவரும் நீதிபதி, வழக்கறிஞர்களோடு குற்றம் நடந்த பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர். வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர், கிம் ஜோங் நாம்மை, 45, இந்த இருவரும் நச்சுவாய்ந்த ரசாயனத்தைக் கொண்டு தாக்கி கொலை செய்ததை விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பதிவு செய்துள்ளன. இருவரும் தாங்கள் அந்தத் தாக்குதலை நடத்த முன்வர வில்லை என்றும் அதை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளி விடப்பட்டதாகவும் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்திற்கு அவர்கள் பொறுப்பல்ல என்றும் கூறிவரு கின்றனர்.

சம்பவ இடத்திற்கு பலத்த பாதுகாப்புடன் வந்த குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் உடல்நலக் குறைவாக காணப்பட்டனர் என்றும் சக்கர நாற்காலியில் விமான நிலையத்தைச் சுற்றி வந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்