ஐஎஸ் இயக்கத்தை சேர்ந்த 9 பேர் இந்தோனீசியாவில் கைது

ஐஎஸ் இயக்கத்தை சேர்ந்த 9 பேர் இந்தோனீசியாவில் கைது

1 mins read

ஜகார்த்தா: ஐஎஸ் இயக்கத்தின் ஆதரவு அமைப்போடு தொடர்புள்ள ஒன்பது ஆடவர்களை இந்தோ னீசிய அதிகாரிகள் கைது செய் துள்ளனர். போலிஸ் நிலையங் களில் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்ததாகத் தெரிவிக்கப் பட்டிருந்தது. ஐஎஸ் இயக்கத்தின் ஆதிக்கத் தால் முஸ்லிம் பெரும்பான்மையினர் இருக்கும் இந்தோனீசியாவில் அண்மையில் அதிக எண்ணிக்கை யில் மக்கள் பயங்கரவாதிகளாக மாறிவருகின்றனர் என்றும் அத னால் போலிசார் அந்தப் பிரச்சி னையை எதிர்நோக்க முயற்சி எடுத்துவருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியாவ் மாநிலத்தில் எட்டு பேரும் சுலாவெசி மாநிலத்தில் ஒருவரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கள் இந்தோனீசியாவின் மிகப் பெரிய பயங்கரவாத இயக்கமான ஜமா அஷருத் தவ்லா இயக்கத் துடன் தொடர்புடையவர்கள் என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்தோனீசியாவில் பயங்கரவா தத்தை எதிர்கொள்ளும் போலிஸ் படையான 'டிடெச்மண்ட் 88' வழக்கமாக ஆண்டிறுதியில் கண் காணிப்பை அதிகப்படுத்தும். புத்தாண்டையும் கிறிஸ்துமஸ் தினத்தையும் குறிவைத்துத் தாக் குதல் நடத்தத் திட்டமிடும் பயங்கர வாதிகளை முடக்குவதற்காக அந்த ஏற்பாடுகள் செய்யப்படுகின் றன என்றும் தெரிவிக்கப்பட்டது.