பதவி இழந்த ஆஸ்திரேலிய துணைப் பிரதமர்

பதவி இழந்த ஆஸ்திரேலிய துணைப் பிரதமர்

1 mins read

கேன்பரா: இருநாட்டுக் குடியுரிமை வைத்திருந்த காரணத்தினால் ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் பார்னபி ஜோய்ஸின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாகத் திரு ஜோய்ஸின் தொகுதியில் வரும் டிசம்பர் 2ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடத்தப்படும். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் குடியுரிமை வைத்திருந்த திரு ஜோய்ஸ், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தமது நியூசிலாந்து குடியுரிமையை ரத்து செய்தார். பதவி பறிபோன நிலையில் வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக அவர் அறிவித்துள்ளார். கடந்த தேர்தலின்போது இருநாட்டுக் குடியுரிமை வைத்திருந்த காரணத்துக்காக திரு ஜோய்ஸ் உட்பட மேலும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆஸ்தி ரேலிய உயர் நீதிமன்றம் பதவி நீக்கம் செய்தது. இந்நிலையில், ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புலின் அரசாங்கம் நாடாளு மன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளது.