மலேசியாவில் இதுவரை நடந்தி ராத அளவுக்குப் பெரியதொரு தனிப்பட்ட விவர ஊடுருவல் நிகழ்ந்துள்ளதாக நம்பப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் உள்ள 46.2 மில்லியன் கைபேசி எண்ணுக்கு உரியவர்கள் இடரில் சிக்கும் நிலை ஏற்படக்கூடும் என 'த ஸ்டார்' இணையச் செய்தி தெரிவிக்கிறது. கைபேசி எண்ணுக்கு உரியவர் களின் வீட்டு முகவரி, அடையாள அட்டை எண், சிம் கார்ட் விவ ரங்கள் போன்ற சொந்த விவரங் கள் தவறானவர்களின் கை களுக்குச் சென்று சேர்ந்திருப்ப தாக நம்பப்படுகிறது.
கைபேசித் தரவுகள் கசியத் தொடங்கியதை முதன்முதலாக இம்மாதத் தொடக்கதில் இணையக் கருத்து மன்றங்களும் Lowyat.net என்னும் செய்தித் தளமும் தெரிவித்தன. கிட்டத்தட்ட 46.2 மில்லியன் கைபேசி எண்களின் விவரங்களும் கசிந்துவிட்டதை அந்தச் செய்தித் தளம் நேற்று முன்தினம் உறுதிப் படுத்தியது. மலேசியாவின் மொத்த மக்கள் தொகை கிட்டத்தட்ட 32 மில்லி யன். இருப்பினும் பலரும் ஒன் றுக்கு மேற்பட்ட கைபேசி எண் களை வைத்துள்ளனர். தகவல் ஊடுருவப்பட்ட கைபேசி எண்களுள் பல பயன் படுத்தப்படாதவைகளும் சுற்றுப் பயணிகளால் வாங்கப்பட்டவை களும் அடங்கும். இவ்வாறு சொந்த விவரங்கள் கசிந்தது உண்மையாக இருப்பின் மலேசியர்களின் கைபேசிகள் இணையத் தாக்குதல்களுக்கு ஆளாகக்கூடும்.

