ஜப்பான் கொலை வழக்கு: வாரம் ஒருவரை கொலை செய்தவர் கைது

ஜப்பான் கொலை வழக்கு: வாரம் ஒருவரை கொலை செய்தவர் கைது

1 mins read

தோக்கியோ: ஒன்பது பேரை கொலை செய்த தொடர் கொலை வழக்கில் 27 வயது ஜப்பானிய ஆடவர் டக்காஹிரொ ‌ஷிரை‌ஷி (படம்) கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக வாரத்திற்கு ஒருவரை அவர் கொலை செய்துள்ளார். டுவிட்டர் மூலம் தற்கொலை செய்ய விரும்புபவர்களுக்கு தாம் உதவி செய்வதாகக் கூறி அந்த எட்டு பெண்களையும் ஒரு ஆடவரையும் அவர் அழைத்துள்ளார். ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி தோக்கியோவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஸாமா எனும் இடத்தில் குடிபுகுந்த அந்த ஆடவர், கொலை செய்தவர்களின் சடலங்களை முறையற்ற வகை யில் பதுக்கி வைத்துள்ளார். 23 வயது பெண் ஒருவர் காணாமல் போனதை அடுத்து தேடுதல் வேட்டையில் இறங்கிய போலிசார் ‌ஷிரை‌ஷியை கண்டு பிடித்து கைது செய்துள்ளனர். ஜப்பானில் குற்றச்செயல்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தும் இத்தகைய கொடூரமான தொடர் கொலை சம்பவங்கள் ஜப்பானிய மக்களை திடுக்கிட வைத்துள்ளது.