ஜப்பான் $67.9 மி. நிதியுதவி

ஜப்பான் $67.9 மி. நிதியுதவி

1 mins read
a483a8b2-a54b-4002-9d03-d5eb2a263789
-

தோக்கியோ: பெண் தொழில் முனைவர்களை ஊக்குவிக்கும் உலக வங்கியின் முயற்சிக்கு ஜப்பான் $67.9 மில்லியன் நிதி அளிக்கும் என்று ஜப்பான் பிரதமர் ‌ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். ஜப்பானில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பெண்கள் உலக சபைக் கருத்தரங்கில் அந்த அறி விப்பை அவர் வெளியிட்டார். அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் மூத்த ஆலோசகரும் அவரது மகளுமான இவான்கா டிரம்ப் அக்கருத்தரங்கில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். பொதுத் துறையும் தனியார் துறையும் இணைந்து கடன் வழங்கும் உலக வங்கியின் பெண் தொழில் முனைவர் நிதித் திட்டத் திற்கு ஆக அதிகளவில் நிதி வழங்கிய நாடாக ஜப்பான் திகழும். இந்த ஆண்டின் ஜி20 கூட்டத்தில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தை இவான்கா டிரம்ப் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கிறார்.

ஜப்பானில் நடந்த பெண்கள் உலக சபையில் சிறப்புரை ஆற்றிய இவான்கா டிரம்ப். இதுபோன்ற ஒரு உரையை ஜெர்மனியில் இவ்வாண்டின் முதல் பகுதியில் ஏஞ்சலா மெர்க்கல் ஏற்பாடு செய்த மகளிர் கருத்தரங்கில் இவான்கா பேசினார். படம்: ராய்ட்டர்ஸ்