ஓட்டுநர் இல்லாமல் இயங்கிய பேருந்து லாஸ் வேகஸில் லாரி மீது மோதியது

ஓட்டுநர் இல்லாமல் இயங்கிய பேருந்து லாஸ் வேகஸில் லாரி மீது மோதியது

1 mins read

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் ஓட்டுநர் இல்லாமல் இயங்கிய ஒரு பேருந்து ஒரு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் பயணி கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். ஓட்டுநர் இல்லாமலேயே இயங் கும் கார் உள்ளிட்ட வாகனங் களை ஏற்கெனவே பல்வேறு நிறுவனங்கள் தயாரித்துள்ளன. இவற்றின் சோதனை வெற்றி பெற்றுள்ளது. அமெரிக்காவில் தானியங்கி வாகனங்களைச் சாலைகளில் இயக்குவதற்கு அமெரிக்க அரசு அனுமதி அளித் துள்ளது. இதன்படி லாஸ் வேகஸ் நகரில் தானியங்கி வாகனங்களை இயக்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடத்தப்பட்டது. அந்த பேருந்தில் 12 பயணிகள் இருந் தனர். ஒரு மணி நேரம் சரியாக ஓடிய அந்தப் பேருந்து அந்த வழியாக வந்த லாரி மீது மோதியது. லாரி ஓட்டுநரின் தவறால்தான் இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.