மலேசியாவில் நாளை முதல் வடகிழக்குப் பருவமழை

மலேசியாவில் நாளை முதல் வடகிழக்குப் பருவமழை

1 mins read

தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கடலோரப் பகுதிகளிலும் சாபா, சரவாக் ஆகிய மாநிலங்களிலும் வடகிழக்குப் பருவமழை நாளை தொடங்கலாம் என்றும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை மழை நீடிக்கும் என்றும் முன்னுரைக்கப் பட்டுள்ளது. "வரும் டிசம்பர் மாதம் வரை கிளந்தான், திரெங்கானு, பாஹாங், ஜோகூர் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யக்கூடும். டிசம்பர், ஜனவரி மாதங்களில் மேற்கு சரவாக்கிலும் வடக்கு, கிழக்கு சாபாவிலும் கனமழை பெய்யலாம்," என்று வானிலைத் துறையின் அறிக்கை கூறுகிறது.