வடகொரியாவுக்கு நெருக்குதல் கொடுக்க தலைவர்கள் இணக்கம்

வடகொரியாவுக்கு நெருக்குதல் கொடுக்க தலைவர்கள் இணக்கம்

1 mins read

மணிலா: வடகொரியா அதன் அணுவாயுதத் திட்டத்தைக் கைவிட அந்நாட்டின் மீது அதிகபட்ச நெருக்குதல் கொடுக்க அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பும் கிழக்கு ஆசிய மற்றும் ஆசியான் தலைவர்களும் விரும்புகின்றனர். நேற்று கிழக்கு ஆசிய மாநாடு தொடங்குவதற்கு முன்பு வெளியிடப்பட்ட வரைவு அறிக்கையில் அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். வடகொரியாவின் பேரழிவு ஆயுத மேம்பாடு குறித்தும் ரசாயன மற்றும் ஏவுகணை தொழிட்நுட்பம் குறித்தும் தாங்கள் மிகுந்த கவலை கொண்டிருப்பதாக அந்த அறிக்கையில் தலைவர்கள் கூறியுள்ளனர். வடகொரியா அதன் அணுவாயுதத் திட்டத்தைக் கைவிட பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்றும் ஐநா தீர்மானத்தை மதித்து நடக்க வேண்டும் என்றும் உலகத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.