வாஷிங்டன்: அமெரிக்க செனட் சபை உறுப்பினராவதற்கு அலபா மாவில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராய் மூர் மீது பல பெண்கள் தற்போது பாலியல் புகார்கள் கூறி வருவதைத் தொடர்ந்து அவர் போட்டியிலிருந்து விலக வேண்டும் என்று அமெரிக்க செனட் பெரும்பான்மைத் தலைவர் மிச் மெக்கோனல் தலைமையில் குடியரசுக் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு ராய் மூர், 14 வயது சிறுமி யுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்ததாகவும் பல இளம் பெண்களுடன் காதல் உறவை தொடர்ந்ததாகவும் ராய் மூர் மீது புகார்கள் கூறப்படுகிறது.
கோர்ஃப்மன் என்ற அமெரிக்க மாது, தான் 14 வயது சிறுமியாக இருந்தபோது ராய் மூர் தனக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்த தாகவும் அரசாங்க வழக்கறிஞ ராகப் பணியாற்றிய ராய் மூருக்கு அப்போது 32 வயது என்றும் அந்த மாது கூறியுள்ளார். நெல்சன் என்ற மற்றொரு இளம் பெண், ராய் மூர் தன்னை பாலியல் ரீதியில் தாக்கியதாக நியூயார்க்கில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத் தில் கண்ணீர் மல்க கூறியிருக் கிறார். இந்நிலையில் ராய் மூர், தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்றும் அரசியல் நோக்கம் கொண்டவை என்றும் கூறியுள்ளார்.

