டெஹ்ரான்: ஈரான்-ஈராக் எல்லையில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின்போது உயிர் தப்பிய ஆயிரக்கணக்கான ஈரானியர்கள் தங்குவதற்கு இடமின்றி இரண் டாவது நாளாக நேற்று கடும் குளிரில் வெட்டவெளியில் இரவுப் பொழுதைக் கழித்தனர். ஈரானின் கெர்மான்சா மாநிலம் நிலநடுக்கத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்துவிழுந்து தரைமட்டமாகின. மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இப்பகுதியில் உடனடி நிவாரணப் பணிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. ஈரான்-ஈராக் எல்லைக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 500க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும் சுமார் 8,000 பேர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். ஈரானில் நேற்றைய தினம் துக்கதினமாக அனுசரிக்கப்பட்டது.
தங்க இடமின்றி தவிக்கும் ஈரானிய மக்கள்
1 mins read

