போலி 'டத்தோ' பட்டங்களை விற்ற மோசடி கும்பல் முறியடிப்பு

போலி 'டத்தோ' பட்டங்களை விற்ற மோசடி கும்பல் முறியடிப்பு

1 mins read
8a7b488d-9ab7-4d71-9fff-e3fcb6c59943
-

ஜோகூர் பாரு: மலேசியாவில் போலி யாக 'டத்தோ' பட்டங்களை விற்ற கும்பலை காவல்துறையினர் முறியடித் துள்ளனர். இதையடுத்து மில்லியன் கணக் கான ரிங்கிட்டுக்கு 'டத்தோ' பட்டம் விற்கப்பட்ட விவரம் தெரிய வந்துள் ளது. இதன் தொடர்பில் அக்டோபர் 30ஆம் தேதி இருவர் கைது செய்யப் பட்டதாக ஜோகூர் போலிஸ் தலைவர் முஹமட் கலில் காதர் முஹமட் கூறி னார். இவர்களிடம் ஏமாந்தவர்கள் 'டத்தோ' பட்டத்தைப் பெறுவதற்கு 180,000 ரிங்கிட் முதல் 280,000 ரிங் கிட் வரை கொடுத்துள்ளனர். தனிப் பட்டவர்களுக்கான குழுவில் உறுப் பினர் ஆவதற்கு மேலும் 10,000 ரிங்கிட் வசூலிக்கப்பட்டுள்ளது.

"இரு சந்தேக நபர்களின் வயது முறையே 40, 57. பத்து பகாட்டில் உள்ள பதிவு செய்யப்படாத அரசாங்க சார்பற்ற அமைப்பின் மூலம் இருவரும் போலி 'டத்தோ', 'டத்தோஸ்ரீ' பட்டங் களை விற்று வந்துள்ளனர்," என்று கலில் குறிப்பிட்டார். சந்தேக நபர்கள் தங்களை அங்கீ கரிக்கப்பட்டவர்களைப் போல காட்டிக் கொள்வதற்காக போலி பதக்கங்கள், நியமனக் கடிதங்கள் ஆகியவற்றை ஆதாரமாக வைத்திருந்தனர். "டத்தோ பட்டம் எளிதில் கிடைக் கக்கூடியது அல்ல. பணத்தைக் கொடுத்து வாங்கவும் முடியாது," என்று நேற்று மாநில காவல்துறை தலைமையகத்தில் செய்தியாளர் களிடம் பேசிய திரு கலில் தெரி வித்தார்.

சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போலி முத்திரைகள், சின்னங்கள், சான்றிதழ்கள், பதக்கங்கள். படம்: த ஸ்டார்