மலேசியா தீ விபத்தில் தாய், மனைவி, இரு குழந்தைகளை இழந்த பிரமுகர்

மலேசியா தீ விபத்தில் தாய், மனைவி, இரு குழந்தைகளை இழந்த பிரமுகர்

1 mins read
953730fb-a7f8-4f28-9e0b-a8990f42af76
-

ஜார்ஜ் டவுன்: பெங்காலான் வெல்ட் பிந்தாசான் செசிலில் உள்ள இரண்டு மாடி கட்டடம் தீப்பற்றி எரிந்ததில் மலேசிய சீனர் சங் கத்தின் தஞ்சுங் இளையர் பிரிவு தலைவர் லிம் சுவீ போக்கின் குடும்பத்தினர் அனைவரும் இறந்துவிட்டனர். அவரது 62 வயது தாயார் லாவ் சாய் போ, அவரது 35 வயது மனைவி சென் யென், ஒன்பது வயது மகன், எட்டு வயது மகள் ஆகியோர் தீயில் கருகி மாண் டனர். கடந்த நவம்பர் 5ஆம் தேதி 72 வயது தந்தையின் மறைவுக்குப் பிறகு மற்றொரு பேரிடியாக தமது குடும்பத்தை திரு லிம் இழந்துள் ளார். அதிகாலை 6.00 மணியளவில் தீ மூண்டதாக நம்பப்படுகிறது. அப்போது திரு லிம் வீட்டில் இல்லை. வீட்டின் தரைத் தளத்தில் மூன்று உடல்கள் கிடந்ததாகவும் வீடு இடிந்துவிழுந்ததில் குழந்தை யின் உடல் ஒன்று இரண்டாவது மாடியிலிருந்து கீழே விழுந்த தாகவும் தீயணைப்பு, மீட்புப் படையின் இயக்குநர் சாடூன் மொக்தர் கூறினார். சம்பவ இடத்துக்கு வந்த இருபது தீ அணைப்பாளர்கள் சுமார் 7.10 மணியளவில் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தீயில் கருகி சேதமடைந்துள்ள இரண்டு மாடி வீடு. படம்: இணையம்