கோலாலம்பூர்: மலேசியாவில் அடுத்துவரும் பொதுத் தேர்தலில் மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது போட்டியிடக்கூடும் என்று அவரது கட்சியின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 92 வயதாகும் திரு மகாதீர், லங்காவியில் அல்லது புத்ராஜெயாவில் நாடாளுமன்ற இடத்திற்கு போட்டியிட வாய்ப்பு உள்ளது என்று அந்த அதிகாரி கூறினார். திரு மகாதீர் வேட்பாளராக தன்னை அறிவித்துக்கொள்ள முன்வருவார் என்று தான் கருதுவதாக பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சியின் துணைத் தலைவர் அப்துல் ரஷித் அப்துல் ரஹ்மான் கூறினார். புத்ராஜெயாவில் போட்டியிடுமாறு திரு மகாதீரை கேட்டுக்கொண்டுள்ள போதிலும் அவர் பெரும்பாலும் லங்காவியில் போட்டியிட வாய்ப்புள்ளது என்று அப்துல் ரஹ்மான் கூறினார். மலேசியாவில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
பொதுத் தேர்தலில் மகாதீர் போட்டியிடக்கூடும்'
1 mins read

