கிரீஸில் கனமழையும் வெள்ளப்பெருக்கும்

கிரீஸில் கனமழையும் வெள்ளப்பெருக்கும்

1 mins read
60f0e91a-97bd-4a9a-8c44-8a169d12c113
-

கனமழை மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கிரீஸ் தலைநகர் ஏதென்சின் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. வெள்ளநீரில் சிக்கிக்கொண்ட காரை வெளியில் கொண்டுவருவதற்காக ஒருவர் அக்காருக்குள் நுழைய முயன்றார். தொடர்ந்து பெய்த கனமழையில் பல சாலைகள் முழுமையாக பழுதடைந்ததாகவும் சுமார் 1,000 வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு தீயணைப்பாளர்கள் உதவி வருகின்றனர். படம்: ஏஎஃப்பி