வடகொரியாவுக்கு வலிமையை உணர்த்த ஜப்பான்- அமெரிக்கா கடற்படை பயிற்சி

வடகொரியாவுக்கு வலிமையை உணர்த்த ஜப்பான்- அமெரிக்கா கடற்படை பயிற்சி

1 mins read

தோக்கியோ: வடகொரியாவின் மிரட்டல் அதிகரித்துள்ள நிலை யில் அமெரிக்காவும் ஜப்பானும் சேர்ந்து பத்து நாள் கடற்படை பயிற்சியைத் தொடங்கியுள்ளன. வடகொரியாவுக்கு அமெரிக்கா மற்றும் ஜப்பானின் படைபலத்தை காண்பிக்கும் வகையில் மாபெரும் பயிற்சியில் அவ்விரு நாடுகளும் ஈடுபட்டுள்ளன. அப்பயிற்சியில் 14,000 அமெரிக்க வீரர்களுடன் ஜப்பா னிய வீரர்களும் பங்கு கொள் கின்றனர். அமெரிக்காவின் விமானந்தாங்கி கப்பல்களும் ஏவுகணை அழிப்பு சாதனங் களுடன் கூடிய கப்பல்களும் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக ஜப்பான் கூறுகிறது. வடகொரியாவின் அண்மைய அணுவாயுத மற்றும் ஏவுகணை சோதனைகளால் வட்டாரத்தில் பதற்றம் நிலவும் வேளையில் அமெரிக்காவும் ஜப்பானும் சேர்ந்து இப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

இப்பயிற்சிக்கு வடகொரியா எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஜப்பானில் இத்தகைய செயல், வடகொரியா மீது போர் தொடுப்பதற்கான ஒத்திகைப் பயிற்சி என்று வடகொரியா கூறி வருகிறது. இருப்பினும் வடகொரியாவின் இக்குற்றச்சாட்டை அமெரிக்காவும் ஜப்பானும் மறுத்துள்ளன.