ஸிம்பாப்வேயில் அடுத்த நடவடிக்கை பற்றிய கவலை

ஸிம்பாப்வேயில் அடுத்த நடவடிக்கை பற்றிய கவலை

1 mins read

ஹராரே: ஸிம்பாப்வேயில் நாட்டின் அதிகாரத்தை ராணுவம் கைப் பற்றிய நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை எதிர்பார்த்து அந்நாட்டு மக்கள் காத்திருக்கின்றனர். ஸிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே வீட்டுக்காவலில் வைக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முகாபேயின் மனைவி, நமிபியா நாட்டுக்கு தப்பிச்சென்றுவிட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. திரு முகாபேவுக்கு அடுத்து அதிபர் பதவியில் யார் வருவார்கள் என்ற அதிகார மோதல் ஏற்பட்டதை யடுத்து ராணுவம் இந்த நட வடிக்கையை எடுத்துள்ளது.

கடந்த வாரம் ஸிம்பாப்வேயின் துணை அதிபர் எம்மர்சன் மனங்கேக்குவா பதவியிலிருந்து திடீரென்று நீக்கப்பட்டார். அவரது நீக்கம், முகாபேவின் மனைவி அதிபராக வருவதற்கான சூழ் நிலையை உருவாக்கியது. அதே சமயம், ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் தாங்கள் ஓரங்கட்டப் படுவதைப் போன்று உணரும் சூழலுக்கும் தள்ளப் பட்டனர். இதனைத் தொடர்ந்து ராணுவம் அதிரடி நடவடிக்கையில் இறங் கியது.

நாட்டின் அதிகாரப் பொறுப்பை ராணுவம் கைப்பற்றி யது. இந்த ராணுவ நடவடிக்கையில் திருமதி முகாபேக்கு நெருக்கமான வர்களை ராணுவம் ஒடுக்கி வருவ தாகக் கூறப்படுகிறது. அவருக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் சில நாட்களுக்கு முன்பு ராணுவத் தலைவரை கடுமையாகக் குறை கூறி இருந்தார். பின்னர் அதற்காக அவர் வெளிப்படையாக மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.