சிட்னி: 'சிக்கன் நகட்ஸ்' பிரியரான ஆஸ்திரேலியர் ஒருவர் சிட்னியில் உள்ள மெக் டோனல்ட் உணவகத்திற்குச் சென்று சிக்கன் நகட்சிற்கு ஆர்டர் கொடுத்திருக்கிறார். ஆனால் அந்த துரித உணவுக் கடையில் காலை நேரத்தில் 'நகட்ஸ்; விற்கப் படுவதில்லை. இதனால் கடை ஊழியர்கள் அந்த உணவு இல்லை என்று கூறியதும் அவர் கள் மீது சினம் கொண்ட அந்த ஆடவர், பதிலுக்கு 200 ஹேஷ் பிரெளன் தனக்கு வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். இதனால் செய்வதறியாது திகைத்த மெக்டோனல்ட் உணவக ஊழியர்கள் அந்த ஆடவரைப் பற்றி போலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடி யாக அங்கு வந்த போலிசார், சிட்னியைச் சேர்ந்த அந்த ஆடவரைச் சோதனை செய்த போது அவர் அளவுக்கு அதிக மாகக் குடித்திருப்பது தெரிய வந்தது. குடிபோதையில் காரோட்டி வந்த குற்றத்திற்காக அவரை போலிசார் கைது செய் தனர். சிட்னியில் உள்ள உண வகத்தில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்தது. அவரது வாகன உரிமம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக வும் இம்மாதம் 30ஆம் தேதி அவர் நீதிமன்றத்தில் முன் னிலைப்படுத்தப்படுவார் என்றும் போலிசார் கூறினர்.

