பதவி விலக மறுத்துவரும் ஸிம்பாப்வே அதிபருடன் ராணுவம் தொடர்ந்து பேச்சு

பதவி விலக மறுத்துவரும் ஸிம்பாப்வே அதிபருடன் ராணுவம் தொடர்ந்து பேச்சு

1 mins read
ace3ba87-e331-464a-ac14-c3e3a951455c
-

ஹராரே: ஸிம்பாப்வேயில் ராணுவம் அதிரடியாக அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள அந்நாட்டு அதிபர் ராபர்ட் முகாபே பதவி விலக மறுத்து வருவதைத் தொடர்ந்து அவருடன் ராணுவம் தொடர்ந்து பேச்சு நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. கடந்த 37 ஆண்டுகளாக ஸிம்பாப்வே அதிபராக இருந்து வரும் முகாபேக்கு தற்போது 93 வயதாகிறது. அவருக்கு அடுத்து அதிபர் பொறுப்பை ஏற்பதில் ஆளும் கட்சிக்கு இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து ராணுவம் புதன்கிழமை திடீர் புரட்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றியது.

இது ஆட்சி கவிழ்ப்பு முயற்சி அல்ல என்று ராணுவம் கூறிய போதிலும் திரு முகாபே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அதிபருடன் இருந்துகொண்டு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் களைக் குறிவைத்தே இந்த நட வடிக்கை எடுக்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. அதிகார மாற்றம் குறித்து திரு முகாபேவுடன் ராணுவம் தொடர்ந்து பேச்சு நடத்தி வருவதாகவும் அதுவரை மக்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் ராணுவம் கேட்டுக்கொண் டுள்ளது. வட்டாரத் தூதர்களு டனும் ராணுவத் தலைவர்களு டனும் நேற்று முன்தினம் பேச்சு நடத்திய திரு முகாபே பதவி விலக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஸிம்பாப்வே அதிபர் முகாபேயுடன் (வலமிருந்து இரண்டாவது) ஸிம்பாப்வே தற்காப்புப் படைத் தளபதி கான்ஸ்டான்டினோ சிவென்காவும் தென்னாப்பிரிக்கத் தூதர்களும் பேச்சு நடத்தி வருகின்றனர். படம்: ஏஎஃப்பி