ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் தயாரிப்பில் வடகொரியா

ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் தயாரிப்பில் வடகொரியா

1 mins read

வா‌ஷிங்டன்: ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் தயாரிப்பதில் வடகொரியா தீவிரமாக ஈடுபட்டிருப்பதை இம் மாதம் எடுக்கப்பட்ட துணைக் கோளப் படங்கள் உணர்த்துவதாக அமெரிக்க கண்காணிப்பு நிறு வனம் ஒன்று தெரிவித்துள்ளது. வடகொரியாவின் சின்போ சவுத் பட்டறையில் இம்மாதம் 5ஆம் தேதி எடுக்கப்பட்ட துணைக்கோளப் படங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏந்திச்செல்லும் நீர்மூழ்கிக் கப்பல் தயாரிப்பில் வடகொரியா மும்முரமாக ஈடு பட்டிருப்பதை உணர்த்துகிறது என்று அந்த நிறுவனம் குறிப் பிட்டுள்ளது.

நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவுகணைகளைப் பாய்ச்சும் செயல் முறையைச் சோதனை செய்வதில் வடகொரியா ஈடுபட்டுள்ளதை அந்த செயற்கைக்கோள் படங்கள் உணர்த்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். வடகொரியா தயாரித்து வரும் அந்த நீர்மூழ்கிக் கப்பல் வடகொரியாவின் ரோமியோ தர நீர்மூழ்கிக் கப்பல்களைவிட பெரிய தாக இருக்கக்கூடும் என்றும் அமெரிக்க நிறுவனத்தின் நிபுணர் கள் தெரிவித்துள்ளனர்.

நீர்மூழ்கிக் கப்பல் தயாரிப் பதற்கான உதிரிப் பாகங்களை வடகொரிய கப்பல் பட்டறையின் கட்டுமான இடத்திற்கு வட கொரியா சென்ற ஆண்டு முழுவதும் கொண்டு சென்றி ருப்பது தெரியவந்துள்ளது என்றும் அமெரிக்க நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்தது. அமெரிக்கா வரை சென்று தாக்கக்கூடிய ஆற்றல் மிக்க ஏவு கணைகளை வடகொரியா அண்மையில் சோதனை மேற் கொண்டு வந்துள்ளது.