இலங்கையில் பௌத்த, முஸ்லிம் சமயத்தாரிடையே மோதல், 19 பேர் கைது

இலங்கையில் பௌத்த, முஸ்லிம் சமயத்தாரிடையே மோதல், 19 பேர் கைது

1 mins read

இலங்கையில் பெரும்பான்மை பௌத்த இனத்தைச் சேர்ந்த தீவிரவாதச் சிந்தனையாளர்கள், சிறுபான்மை முஸ்லிம் இனத்தவர் ஆகியோருக்கிடையே நேற்று முன்தினம் மூண்ட மோதலில் நால்வர் காயம் அடைந்ததை அடுத்து 19 பேரை இலங்கை போலிசார் கைது செய்திருப்பதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். வற்புறுத்தி இஸ்லாம் சமயத் துக்கு மாற்றுவது, பௌத்த சம யத் தொல்பொருள் இடங்களைச் அழித்தல் போன்ற செயல்களில் முஸ்லிம்கள் ஈடுபடுவதாக சில பௌத்த குழுக்கள் குற்றஞ்சாட்டு வதால் இரு சமயத்தாரிடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

மியன்மாரில் பௌத்த சமயத் தாரால் துன்புறுத்தலுக்கு உட் பட்ட ரோஹிங்யா முஸ்லிம் சிறுபான்மையினர் சிலர் இலங்கை யில் அகதிகளாக இருந்து வருகின்றனர். அதற்கு எதிராக இலங்கையைச் சேர்ந்த பௌத்த சமயத்தவர் சிலர் போராட்டம் நடத்தியுள்ளனர். இலங்கையின் தெற்குப் பகுதியில் இருக்கும் கடற்கரை நகரமான ஜின்தோட் டையில் நேற்று முன்தினம் நிகழ்ந்த வன்முறைச் செயலுக்கு சமூக ஊடகங்களில் பரவிய பொய்யான தகவல்களே காரணம் என்று போலிசார் தெரிவித்தனர்.