சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் முக்கியமான குடிநீர் ஆதாரமாக இருந்துவரும் ஜோகூர் ஆற்றில் நீரின் தரம் மோசமடைந்து வருவ தாகவும் அதனைப் பாதுகாப்பது அவசியம் எனவும் நிபுணர் ஒருவர் கருத்துரைத்துள்ளார். சுமார் 2,636 சதுர கிலோமீட்டர் பரப்பிலான ஜோகூர் ஆற்றின் நீர், சேறு, விவசாய நடவடிக்கைகள், சுரங்கங்கள், மணல் அரிப்பு போன்ற வற்றால் மாசடைவதாக யுடிஎம் நீர் ஆய்வுக் கூட்டமைப்பின் தலைமை ஆய்வுப் பேராசிரியர் ஸுல்கிஃப்லி யூசூஃப் கூறியுள்ளார். ஆயிரக்கணக்கான மலேசியர் களைத் தண்ணீரின்றி தவிக்கவிட்ட இரண்டு சம்பவங்கள் இந்த ஆண்டிலேயே நிகழ்ந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
ஜோகூர் ஆற்றின் நீர் மலேசியாவில் வீட்டுத் தேவை களுக்குப் பயன்படுத்தப்படுவ தோடு அதிலிருந்து நாள்தோறும் சிங்கப்பூருக்கு 250 மில்லியன் கேலன் தண்ணீர் வழங்கப்படு வதையும் திரு ஸுல்கிஃப்லி தி ஸ்டாரிடம் குறிப்பிட்டார். ஜோகூர் ஆற்றுக்கு ஒருங் கிணைந்த நிர்வாகத்தை அறி முகப்படுத்துவது பற்றி அரசாங் கம் கவனிக்க வேண்டிய தருணம் வந்திருப்பதாகவும் அவர் சொன் னார். "ஆற்றையும் அதன் சுற்றுச் சூழலையும் நிர்வகிப்பதற்கான நல்ல தளமாக அது அமையும்," என்று கூறிய பேராசிரியர் ஸுல்கிஃப்லி, ஆய்வு முழுமையாக நிறைவடைவதற்கு ஈராண்டுகள் வரை பிடிக்கும் என்றார். ஜோகூர் ஆற்றின் நீர் மாசுபடுவதற்குக் காரணமானவர் களிடம் அபராதம் வசூலித்து அதனை நீர் பாதுகாப்பு நடவடிக் கைகளுக்குப் பயன்படுத்தவும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

