வடகொரிய அதிகாரிகளை சந்தித்துப் பேசிய சீன சிறப்பு தூதர்

வடகொரிய அதிகாரிகளை சந்தித்துப் பேசிய சீன சிறப்பு தூதர்

1 mins read

சோல்: சீனாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையில் நீடிக்கும் நீண்ட கால பாரம்பரிய நட்பு இரு நாட்டு மக்களுக்கும் மதிப்புமிக்க செல்வமாகும் என்று வடகொரியா சென்றுள்ள சீனாவின் சிறப்புத் தூதர் கூறியுள்ளார். அணுவாயுத விவகாரம் குறித்து வடகொரிய அதிகாரிகளுடன் பேச்சுநடத்த அங்கு சென்றுள்ள சீன சிறப்புத் தூதர் சோங் டே, வடகொரிய அதிகாரிகளைச் சந்தித்துப் பேசிய பின்னர் இவ்வாறு கூறினார். அவ்விரு நாடுகளின் மக்கள் நன்மை அடையும் வகையில் இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்த இரு நாடுகளும் கடினமாக பாடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். வடகொரியாவின் அணுவாயுதத் திட்டம் பற்றி வடகொரிய அதிகாரிகளுடன் அவர் முக்கியமாக பேசியிருப்பார் என்று தெரிகிறது.