கோலாலம்பூர்: மலேசியாவில் கைத்தொலைபேசி சந்தாதாரர்கள் 46 மில்லியன் பேரின் தகவல்கள் கசிந்து இணையம் வழி ஓமன் வரை பரவியிருப்பதை மலேசிய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ள னர். அதனைத் தொடர்ந்து அது தொடர்பில் மலேசிய அதிகாரிகள் புலன்விசாரணை செய்து வருவ தாக மலேசிய போலிஸ் படைத் தலைவர் முகமது ஃபுஸி ஹருன் கூறியதாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தகவல் தெரிவித்தது. போலிசார், மலேசிய தொடர்புத் துறை மற்றும் ஊடகத் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் புலன்விசாரணை செய்து வருவ தாகவும் திரு ஃபுஸி கூறினார்.
தகவல் கசிந்தது தொடர்பில் இன்னும் யாரும் கைது செய்யப் படவில்லை என்ற போதிலும் அத்தகைய வேலையில் ஈடுபட்டவர் களில் சிலர் அடையாளம் காணப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த விவகாரம் சிக்கலானது என்றும் இருப்பினும் புலன் விசாரணை தொடர்வதாகவும் அவர் சொன்னார். புலன் விசாரணையாளர்களின் அடுத்த நடவடிக்கை எதுவாக இருக்கும் என்பது பற்றி அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. கசிந்த தகவல்கள் ஒரு சமயம் இணை யத்தில் விற்பனைக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. மில்லியன் கணக்கான மலேசி யர்களின் தனிப்பட்ட விவரங்களும் இணையம் மூலம் கசிந்த தகவல் களில் அடங்கும். புலன் விசாரணையில் மலேசிய தொடர்புத் துறை நிறுவனங்கள் உதவி வருகின்றன.

