முகாபே பதவி விலகக் கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம்

முகாபே பதவி விலகக் கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம்

1 mins read
6e849006-8409-4631-a3d7-513387dd7991
-

ஹராரே: ஸிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே பதவி விலகக் கோரி தலைநகர் ஹராரேயில் நேற்று மிகப்பெரிய ஆர்ப்பாட்டப் பேரணி நடந்தது. நாட்டின் அதிகாரத்தை கடந்த புதன்கிழமை கைப்பற்றிய ராணுவத் தின் ஆதரவுடன் அந்தப் பேரணி நடந்தது. போர் வீரர்கள் சங்க உறுப் பினர்கள், வட்டார கிளைகளின் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் அந்தப் பேரணியில் கலந்து கொண்டதாகக் கூறப் படுகிறது. ஆளும் கட்சியின் வட்டார கிளைகளின் தலைவர்கள் மற்றும் போர் வீரர்கள், திரு முகாபே பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

முகாபேயின் மனைவி ஆளும் கட்சியிலிருந்து விலக வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பதவி நீக்கம் செய்யப்பட்ட துணை அதிபர் மீண்டும் ஆளும் கட்சி மத்தியக் குழுவில் இடம்பெற வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். தற்போது 93 வயதாகும் முகாபே கடந்த சில நாட்களாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந் தார். அதன் பிறகு முதன் முறை யாக அவர் நேற்று பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். ஹராரேயில் நடந்த ஒரு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவர் பங்கேற்றார்.

ஸிம்பாப்வே அதிபர் முகாபே பதவி விலகக் கோரி ஹராரேயில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான மக்கள் கொடிகளை அசைத்தவண்ணம் அதிபருக்கு எதிராக கூக்குரல் எழுப்பினர். படம்: ஏஎஃப்பி