சீனாவின் ஹாய்னான் மாநிலத்தின் சான்யா நகரில் நடந்த உலக அழ கிப் போட்டியில் (மிஸ் வோர்ல்டு) இந்தியாவின் மருத்துவப் படிப்பு மாணவி மனுஷி சில்லர், 20, வெற்றிக் கிரீடம் சூடினார். இந்தியாவில் இதுவரையில் இவரையும் சேர்த்து ஆறு பேர் உலக அழகிகளாக மகுடம் சூடி இருக்கிறார்கள். திரைப்பட நடிகை களான பிரியங்கா சோப்ரா, ஐஸ் வர்யா ராய் ஆகியோரைத் தொடர்ந்து இப்போது மனுஷி சில்லர் வென்று இருக்கிறார். இந்த வெற்றியைத் தொடர்ந்து இந்தியாவும் வெனிசுவேலாவும் உலக அழகி போட்டி வரலாற்றில் ஆக அதிக வெற்றிகளைப் பெற்ற நாடுகளாக ஆகியிருக்கின்றன.
இந்தப் போட்டி இந்த ஆண்டு 67வது தடவையாக நடந்தது. ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மனுஷி சில்லர் இந்திய அழகிப் பட்டம் வென்று உலக அழகிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றார். இந்த ஆண்டுப் போட்டியில் 108 நாடு களைச் சேர்ந்த 118 பேர் பங்கேற்ற னர். மெக்சிகோ அழகி மெசா 2வது இடத்தையும் இங்கிலாந்து அழகி ஸ்டெஃபனி ஹில் 3வது இடத்தையும் பிடித்தனர்.
போட்டியின் ஓர் அங்கமாக கேள்வி பதில் போட்டி நடந்தது. உலகில் அதிக சம்பளம் பெறும் தகுதி எந்த தொழிலுக்காக வழங் கப்படுகிறது? என்ற கேள்விக்குப் பதில் அளித்த மனுஷி "தங்கள் பிள்ளைகளுக்காக தியாகம் செய்யும் தாய்மார்களுக்குத்தான் அதிக ஊதியமும் அன்பும் மரி யாதையும் செலுத்தவேண்டும் எனக் கருதுகிறேன்," என்று பதில் அளித்து வென்றார்.
சீனாவின் சான்யா நகரில் நடந்த போட்டியில் உலக அழகியாக மகுடம் சூடிய இந்தியாவின் மனுஷி சில்லர். படம்: ராய்ட்டர்ஸ்

