அர்ஜெண்டினா நீர்மூழ்கிக் கப்பல் மாயம்; சமிக்ஞை கிடைத்துள்ளது

அர்ஜெண்டினா நீர்மூழ்கிக் கப்பல் மாயம்; சமிக்ஞை கிடைத்துள்ளது

1 mins read
530511ff-066f-4f01-b617-f059a0d31f57
-

பியுனோஸ் ஏரிஸ்: காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலின் செயற்கைகோள் சமிக்ஞை கிடைத்தது. மூன்று நாட்களாகத் தொடர்பை இழந்துவிட்ட 44 ஊழியர்களைக் கொண்ட நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் பணியை அர்ஜென்டினா கடற்படை தென் அட்லாண்டிக்கில் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தற்போது கப்பலின் சமிக்ஞை கிடைத்துள்ளதாகவும், அது காணாமல் போன கப்பலில் இருந்து வந்திருக்கலாம் எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர். சனிக்கிழமை ஏழு செயற்கைக்கோள் அழைப்புகள் அர்ஜென்டினா கடற்படைக்கு வந்தன. தற்போது, அந்த அழைப்புகள் செய்யப்பட்ட இடத்தைக் கண்டறியும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சிலி நாட்டு அரசாங்கங்களும் கப்பலைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணிக்கு உதவி வருவதாக அப்பேச்சாளர் கூறினார். கடலில் 430 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் சன் குவான் என்ற அந்த நீர்மூழ்கிக் கப்பல் காணாமல் போனது.

அர்ஜெண்டினாவின் பியுனோஸ் ஏரிஸ் துறைமுகத்திலிருந்து கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி நீர்மூழ்கிக் கப்பல் புறப்பட்டபோது எடுக்கப்பட்ட படம். படம்: ராய்ட்டர்ஸ்