பெர்லின்: தமது அரசியல் எதிர்காலத்தைக் காப்பாற்றுவதற்கும் புதிதாக தேர்தல் நடைபெறுவதைத் தவிர்ப்பதற்கும் ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் (படம்) கூட்டணி அரசை அமைக்க முயன்று வருகிறார். அதற்காகக் கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஜெர்மன் தேர்தலில் எதிர்பாராமல் வெற்றி பெற்ற வலதுசாரிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றார் திருவாட்டி மெர்க்கல். கடந்த 2015ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 1 மில்லியன் அகதிகளை ஜெர்மனிக்குள் அனுமதித்தது திருவாட்டி மெர்க்கலுக்கு அரசியல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அவருக்கு தேர்தலில் பெரும்பான்மை வெற்றி கிடைக்கவில்லை. கூட்டணி அமைக்கப் படாவிடில் அடுத்த ஆண்டு மீண்டும் ஜெர்மனியில் தேர்தல் நடைபெறவேண்டும். அது ஜெர்மனிக்கும் ஐரோப்பாவுக்கும் பொருளியல் நிலையின்மையை ஏற்படுத்தக்கூடும்.
கூட்டணி அரசை விரும்பும் ஜெர்மனியின் பிரதமர்
1 mins read
-

