ஜப்பானுடன் ராணுவ உளவுத் தகவல்களை பகிர்ந்துகொள்ள தென்கொரியா மறுப்பு

ஜப்பானுடன் ராணுவ உளவுத் தகவல்களை பகிர்ந்துகொள்ள தென்கொரியா மறுப்பு

1 mins read

சோல்: ஜப்பானுடன் உளவுத் தகல்களை பகிர்ந்துகொள்ள தென்கொரியா தற்போது மறுத்துள்ளது. இரு நாடுகளும் ராணுவ உளவுத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள சென்ற ஆண்டு உடன்பாடு கண்டன. இருப்பினும் ராணுவத் தகவல்களை பகிர்ந்துகொள்வதில் தென்கொரியா ஒரு வரம்பை நிர்ணயம் செய்துள்ளது. வடகொரியாவின் அணுவாயுத மற்றும் ஏவுகணைத் திட்டம் தொடர்பில் மட்டுமே உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள முடியும் என்று தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் நிர்வாகம் தற்போது அறிவித் திருப்பதாக பத்திரிகைத் தகவல் தெரிவித் தது.

ஜப்பானும் தென்கொரியாவும் 2016ஆம் ஆண்டு ராணுவம் சம்பந்தப்பட்ட உளவுத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள இணக்கம் கண்டன. உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வது தொடர்பில் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய 3 நாடுகள் உடன்பாடு செய்வது கொள்வதிலிருந்து தென்கொரியா விலகியிருக்க அந்நாட்டு அதிபர் மூன் விரும்புவதாக தகவல்கள் கூறுகின்றன. இதற்கிடையே வடகொரியா இந்த ஆண்டு கூடுதலாக ஏவுகணை சோதனை களை மேற்கொள்ளக்கூடும் என்று தென்கொரியா அச்சம் தெரிவித்துள்ளது. ஐநா தீர்மானத்தையும் மீறி வடகொரியா அதன் அணுவாயுத மற்றும் ஏவுகணைத் திறனை மேம்படுத்திவரும் வேளையில் தென்கொரியா அதன் அச்சத்தை வெளிப் படுத்தியுள்ளது.