ஊழல் விவகாரம்: இந்தோனீசிய நாடாளுமன்ற நாயகர் கைது

ஊழல் விவகாரம்: இந்தோனீசிய நாடாளுமன்ற நாயகர் கைது

2 mins read
1972723f-c994-439a-89e3-6aeeb96284e2
-

ஜகார்த்தா: ஊழல் விவகாரத்தில் ஈடுபட்டதன் சந்தேகத்தின் பேரில் இந்தோனீசிய நாடாளுமன்ற நாயகர் செட்யா நொவாண் டோவை ஊழல் ஒழிப்பு ஆணைய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். அரசாங்கத்திற்குச் சொந்த மான 170 மில்லியன் அமெரிக்க டாலர் (S$230 மில்லியன்) சம்பந்தப்பட்ட ஊழல் விவகாரம் தொடர்பில் 62 வயதாகும் நொவாண்டோவை புலன் விசா ரணை செய்ய அதிகாரிகள் விரும் புகின்றனர். கோல்கார் கட்சித் தலைவரும் ஆளும் கூட்டணிக் கட்சி உறுப் பினருமான நொவாண்டாவோ பயணம் செய்த கார் கடந்த வியாழக்கிழமை இரவு ஒரு மரத்திலும் தெரு விளக்குக் கம் பத்திலும் மோதி விபத்துக் குள்ளானதில் இலேசாக காயம் அடைந்த அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட் டார்.

அவரை மத்திய ஜகார்த்தாவில் உள்ள அரசாங்க மருத்துவமனைக்கு மாற்றுமாறு ஊழல் ஒழிப்பு ஆணையம் உத்தரவிட்டது. அந்த உத்தரவைத் தொடர்ந்து அரசாங்க மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நொவாண்டோவின் உடல்நிலையை அந்த மருத்துவமனை மருத்துவர்களும் இந்தோனீசிய மருத்துவ சங்கத்தின் உயர் மருத்துவர்களும் பரிசோதனை செய்தனர்.

திரு நொவாண்டோ மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய தேவையில்லை என்று மருத்துவர்கள் கூறி யதைத் தொடர்ந்து அவரை ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனர். முன்னதாக கடந்த புதன்கிழமை இரவு நொவாண்டோவைக் கைது செய்வதற்காக அதிகாரிகள் அவரது வீட்டிற்குச் சென்ற போது அவர் அங்கு இல்லை.

இந்தோனீசிய நாடாளுமன்ற நாயகர் செட்யா நொவாண்டோவுடன் ஊழல் ஒழிப்பு ஆணைய அதிகாரிகள். படம்: ஏஎஃப்பி