பெர்லின்: ஜெர்மனியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கூட்டணி ஆட்சி அமைக்கும் முயற்சி நேற்று தோல்வி அடைந்ததை அடுத்து அங்கு மீண்டும் தேர்தல் நடக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஐரோப்பாவின் ஆகப்பெரிய பொருளியலைக் கொண்ட ஜெர்மனி கடந்த சில மாதங்களாக வலுவிழந்த அரசாங்கத்தை வைத்துள்ளது. முக்கிய கொள்கை சார்ந்த நடவடிக்கைகள் எடுக்க முடியாத நிலையில் செயலிழந்துள்ளது. பெரும்பான்மை கிட்டாத நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த தேர்தலில் வெற்றிபெற்ற ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், கூட்டணி அமைப்பதில் வெற்றி காணாத நிலையில் பதற்றம் நிலவி வருகிறது. வர்த்தகத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் 'எஃப்டிபி' கட்சி, மெர்க்கலின் கூட்டணியுடன் இணைவதில் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஜெர்மனியில் கூட்டணி அமைக்கும் முயற்சி தோல்வி
1 mins read

