உலகில் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் நாடு வட கொரியா என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வகைப்படுத்தி இருக்கிறார். அமெரிக்காவின் இந்த முடிவையடுத்து வடகொரியா வுக்கு மேலும் தடைகள் விதிக்கப் படும் வாய்ப்பு இருக்கிறது. இதோடு இல்லாமல், உலக அரங்கில் வடகொரியா ஒதுக்கி வைக்கப்படுவதற்கான வாய்ப்பு களும் அதிகரித்து இருக்கின்றன. அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசிய அதிபர் டிரம்ப், அமெரிக்கா வின் நிதி அமைச்சு வடகொரியா வுக்கு எதிராக கூடுதலான தடை களை அறிவிக்கும் என்றும் தெரி வித்தார்.
வடகொரியாவுக்கு எதிராக விதிக்கப்படும் பெரிய தடையாக இது இருக்கும் என்றார் அவர். வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் அளவுக்கு அணு ஆயுதங்களை உருவாக்கி வருவ தன் காரணமாக அந்த நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் இடையில் அண்மைய காலமாக மோதல் போக்கு தீவிரமாகி வருகிறது. அதிபர் டிரம்ப், ஐந்து நாட்டு ஆசியப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்ற வாரம்தான் அமெரிக்கா திரும்பியிருந்தார். ஆசியப் பயணத்தின்போது வடகொரியா பிரச்சினையில் திரு டிரம்ப் அதிக கவனம் செலுத்தி னார்.
வடகொரியாவுக்கு எதிராக தடைகளை அதிகரிக்கும்படி வட் டார நாடுகளை அவர் வலியுறுத் தினார். "வடகொரியாவைப் பயங்கர வாதத்திற்கு ஆதரவு அளிக்கும் ஒரு நாடாக அமெரிக்கா வகைப் படுத்துகிறது," என்று வெள்ளை மாளிகையில் திங்கட்கிழமை அதிபர் அறிவித்தார். "வடகொரியா உலகத்தை மிரட்டுகிறது. அதோடு மட்டுமின்றி வெளிநாடுகளில் அது படுகொலை உள்ளிட்ட அனைத்துலக பயங்கர வாதச் செயல்களுக்கு ஆதரவு தருகிறது," என்று அதிபர் குறிப் பிட்டார்.

