இளையர்களின் ஆதரவைத் திரட்ட மகாதீர், லிம் கிட் சியாங் முயற்சி

இளையர்களின் ஆதரவைத் திரட்ட மகாதீர், லிம் கிட் சியாங் முயற்சி

1 mins read
f49f31e2-752e-42de-b995-bdec25bbbe22
-

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் அடுத்த ஆண்டு தேர்தல் நடத்தப் படவுள்ள நிலையில் இளம் வாக் காளர்களின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகமதுவும் (92) எதிர்க்கட்சி முக்கிய தலைவர் லிம் கிட் சியாங்கும் (76) ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள நகர மண்டபத்தில் செவ்வாய்க் கிழமை இரவு 200 இளையர்கள் முன்னிலையில் அவ்விருவரும் ஒரே சோஃபாவில் அமர்ந்தபடி பல கேள்வி களுக்கு பதில் அளித்தனர்.

முந்தைய தேர்தல்களில் பிரதமர் நஜிப் ரசாக்கின் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க விரும்பிய 40 வயதுக்குக் குறைந்த வாக்காளர் களின் ஆதரவைப் பெற எதிர்க்கட்சி தவறினால் பெட்டாலிங் ஜெயாவில் எதிர்க்கட்சியின் அண்மைய தேர்தல் வெற்றியில் மாற்றம் இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. 30 வயதுக்கும் குறைந்தவர்களில் பத்தில் ஏழு பேர் அரசியல் பற்றி கவலைப்பட வில்லை என்பதும் அரசியல்வாதிகள் நம்பிக்கைக்குரியவர்களாக இருப்ப தில்லை என்று அவர்கள் நம்புவதாக வும் கடந்த ஆகஸ்ட் மாதம் மேற் கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. பதிவு செய்து கொள்ளாத வாக்காளர்களில் மூன் றில் இரண்டு பங்கினர் 30 வயதுக்கும் குறைந்தவர்கள் என்று தேரதல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீரும் எதிர்க்கட்சித் தலைலர் லிம் கிட் சியாங்கும் பெட்டாலிங் ஜெயாவில் இளம் வாக்காளர்களிடம் பேசுகின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்