ஹராரே: ஸிம்பாப்வேயில் அதிபர் பதவியிலிருந்து ராபர்ட் முகாபே விலகியதைத் தொடர்ந்து அந் நாட்டு மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திரு முகாபேயின் 37 ஆண்டு கால சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்ததையடுத்து மக்களும் ராணுவத்தினரும் மகிழ்ச்சியுடன் ஆரவார கொண்டாட்டங்களில் பங்கேற்று வருகின்றனர். தற்போது தென்னாப்பிரிக் காவில் இருந்துவரும் ஸிம்பாப்வே முன்னாள் துணை அதிபர் எமர்சன் மனங்காக்வா உடனடியாக நாடு திரும்புவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
அவர் நாடு திரும்பிய சில மணி நேரங்களிலேயே ஸிம்பாப்வே யின் புதிய அதிபராக அவர் நியமிக்கப்படலாம் என்று கூறப் படுகிறது. இந்நிலையில் எமர்சன் மனங்காக்வா இம்மாதம் 24ஆம் தேதி ஸிம்பாப்பே அதிபராக பொறுப்பேற்றுக்கொள்வார் என்று ஊடகத் தகவல்கள் தெரிவிக் கின்றன. ஸிம்பாப்வேயில் ராணுவம் சென்ற ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியது முதல் திரு முகாபே பதவி விலக வேண்டும் என்று ராணுவம் உட்பட அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.
அதிபர் பதவியிலிருந்து முகாபே விலகுவதாக நாடாளுமன்ற சபாநாயகர் அறிவித்ததுமே நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையிலேயே எழுந்துநின்று நடனம் ஆடத் தொடங்கினர். ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் திளைத்தனர். படம்: ஏஎஃப்பி

