வடகொரியா மீது புதிய தடைகள்

வடகொரியா மீது புதிய தடைகள்

1 mins read

வா‌ஷிங்டன்: பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் பட்டியலில் வடகொரியா சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டின் மீது டிரம்ப் நிர்வாகம் புதிய தடைகளை அறிவித்துள்ளது. வடகொரிய கப்பல் கட்டுமானத் துறை நிறுவனங்கள் மற்றும் சீன வர்த்தக நிறுவனங்கள் மீதும் வடகொரியாவுடன் அதிகத் தொடர்பு வைத்துள்ள சீன தொழில் அதிபர் ஒருவருக்கும் புதிய தடைகளை அமெரிக்கா அறிவித்துள்ளது. வடகொரியாவின் அணு ஆயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்களுக்கு நிதி ஆதரவு கிடைப்பதைத் தடுத்து அந்நாட்டை தனிமைப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தப் புதிய தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. முன்னதாக பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் நாடு வடகொரியா என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வகைப்படுத்தியிருந்தார்.