இந்தோனீசியாவின் பாலித் தீவு அருகே அகுங் எரிமலைக் குமு றலைத் தொடர்ந்து ஆயிரக்கணக் கானோர் நேற்று தங்களது இருப் பிடத்தைக் காலி செய்துவிட்டு ஓடினர். ஐம்பதாண்டுகளில் ஏற்பட்ட பெரியதொரு எரிமலைக் குமுறல் என்பதால் அதன் ஆபத்துக்கு அஞ்சி அவர்கள் வெளியேறி ஓடி யதாகத் தெரிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை நேரம் அகுங் எரிமலையில் உருவான கரும்புகை 700 மீட்டர் உயரத் திற்கு நீண்டு பரவியது. அந்தச் சம்பவம் மலைப்பகுதி அருகே வசிக்கும் மக்களை அச்சுறுத்தியது. இதற்கு முன்னர் 1963ஆம் ஆண்டு அகுங் மலை எரிமலை வெடித்ததன் விளைவாக பேரிடர் நிகழ்ந்தது. அதனைத் தொடர்ந்து ஏராளமான சிதைவுகளும் சாம்பல் களும் அப்பகுதியைச் சுற்றிலும் சிதறின. இந்தப் பேரிடரில் அப் போது கிட்டத்தட்ட 1,600க்கு மேற் பட்டோர் மாண்டனர்.
கடந்த செப்டம்பர் மாதத்திலும் அகுங் மலை குமுறியதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு பேரிடர் நிகழுமோ என்ற அச்சம் உரு வானது. அதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 140,000 பேர் தங் களது குடியிருப்புகளிலிருந்து வெளியேறி ஓடி வெவ்வேறு பகுதி களில் தஞ்சம் புகுந்தனர். குமுறல் அடங்கியதும் பலர் வீடு திரும் பினர். இருப்பினும் இன்னும் 30,000 பேர் 278 தற்காலிக முகாம்களில் தங்கி இருப்பதாக அதிகாரிகள் கூறினர். இப்படிப்பட்ட நிலையில், நேற்று ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மீண் டும் வேறிடங்களை நோக்கி ஓடி விட்டனர்.
எரிமலைப் புகை நேற்றும் காணப் பட்டது. படம்: ராய்ட்டர்ஸ்

