லாகூர்: பாகிஸ்தானைச் சேர்ந்த இஸ்லாமியவாதியான ஹஃபீஸ் சயீதை ஒரு பயங்கரவாதி என்று இந்தியா அழைக்கிறது. அதே நேரத்தில் ஹஃபீஸ் சயீதைப் பிடித்துக் கொடுப்பவருக்கு 10 மில்லியன் டாலர் ($13.4 மில்லியன்) வெகுமதி வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்தது. ஆனால் இதையெல்லாம் தாண்டி பாகிஸ்தானில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஹஃபீஸ் சயீது சுதந்திர மனிதராக வலம் வர இருக்கிறார். 2008ஆம் ஆண்டு மும்பையில் 166 உயிர்களைப் பறித்த பயங்கர வாதத் தாக்குதலின் 'மூளை' என ஹஃபீஸ் சயீது மீது இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதத்திலிருந்து அவர் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டிருந்தார். அவரது வீட்டுக் காவலை நீட்டிக்க பாகிஸ்தான் அரசாங்கம் விடுத்த கோரிக்கையை ஏற்க அந்நாட்டு நீதிமன்றம் மறுத் துவிட்டது. மும்பை தாக்குதலில் ஹஃபீஸ் சயீதின் பங்கு தொடர்பாக எவ்வித ஆதாரமும் இல்லை என்று கூறிய நீதிமன்றம் அவரை நேற்று முன்தினம் விடுதலை செய்தது.
மும்பை தாக்குதலின் 'மூளை'யை பாகிஸ்தான் விடுதலை செய்தது
1 mins read

