இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள பெஷாவர் நகரில் தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவன் போலிஸ் வாகனத்தைக் குறிவைத்து தாக்கியதில் அந்த வாகனத்தில் இருந்த போலிஸ் அதிகாரியும் அவரது காவலரும் கொல்லப் பட்டதாக போலிசார் கூறினர். அஷ்ரஃப் நூர் என்ற போலிஸ் அதிகாரி நேற்று காலை வேலைக் குச் சென்றபோது அந்தத் தாக்கு தல் நடந்திருக்கிறது. மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவன், அந்த அதிகாரி சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது மோதி வெடிக்கச் செய்ததில் அந்த போலிஸ் அதிகாரி உட்பட இருவர் உயிரிழந்ததாகவும் மேலும் மூவர் காயம் அடைந்ததாகவும் உள்ளூர் போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். அத்தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் போலிஸ் மூத்த அதிகாரி ஒருவரைக் குறிவைத்து தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒரு போராளி தாக்குதல் நடத்தியதில் அந்த அதிகாரியும் அவரது பாதுகாவலரும் கொல்லப்பட்டனர். தாக்குதலில் சேதம் அடைந்த வாகனத்தை அதிகாரிகள் சோதனை செய்கின்றனர். படம்: ஏஎஃப்பி

